ராகிங்கால் தீக்குளித்த கல்லூரி மாணவி சாவு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

ராகிங் கொடுமையால் தீக்குளித்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். அரக்கோணம் அருகே உள்ள இலும்பை தண்டலம் பகுதியில் போஸ்ட்மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தீபா. வயது 17.

கடந்த வாரம்தான் தீபா காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மைக்ரோ பயாலஜி முதலாம் ஆண்டு வகுப்பில் கணேசன்சேர்த்தார். கல்லூரியில் சேர்ந்த இரண்டே நாட்களில் அங்கே படிக்கும் சீனியர் மாணவிகள் தீபாவையும், அவருடைய தோழி குமுதாவையும் ராகிங் செய்தனர்.

அவர்கள் தீபாவிடம் பாட வேண்டும் என்று கூறினர். அவர் எனக்குப் பாடத் தெரியாது என்று கூறினார். அப்படியும் அவர்கள் விடாமல் 2 நாட்கள்கழித்து பாடி, ஆபாசமாக ஆட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் பயந்த தீபா தன் வீட்டுக்கு வந்து குளியலறைக்குச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாள். உடல் முழுவதும் கருகிய நிலையில் தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி மோகனவல்லி, மாணவர்கள் சத்யமூர்த்தி, சசி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் 15 நாட்கள காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தீபாவின் தந்தை கணேசன் அளித்த பேட்டி:

எனக்கு மாலதி, சித்ரா, தீபா, லதா ஆகிய 4 மகள்கள். இதில் மாலதிக்கும் சித்ராவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த வாரம்தான் தீபாவைக்கல்லூரியில் சேர்த்தேன். அந்தக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் என் மகளை நிர்வாணமாக ஆட வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். என்மகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் பலனில்லை.

தீக்குளிப்பதற்கு முன்பு என்னிடம் மைக்ரோ பயாலஜி புத்தகம் கேட்டபோது வாங்கிக் கொடுத்தேன். இது அல்ல வேறு புத்தகம் என்று கூறினாள்.அவள் கேட்ட புத்தகம் வாங்கிக் கொடுப்பதற்குள் தீக்குளித்து விட்டாள்.

என் கடைசி மகள் லதா எஸ்.எஸ்.எல்.சி படித்து வருகிறாள். இந்தச் சம்பவம் காரணமாக அவளை மேற்கொண்டு படிக்க வைக்க மாட்டேன். ராகிங்செய்யும் மாணவ மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+