நாளை மீண்டும் காட்டுக்குச் செல்கிறார் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் புதிய கோரிக்கைகளுக்கான தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பதில்களுடன் வீரப்பனை மீண்டும் சந்திக்க நக்கீரன்கோபால் புதன்கிழமை காட்டுக்குச் செல்கிறார்.
இந்த முறை அவர் வீரப்பனுடன் பேசி, அவன் கடத்தி வைத்துள்ள கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்து கொண்டுவெற்றியுடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட நான்கு பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று 17 நாட்களாகி விட்டன. வீரப்பனின் கோரிக்கையை ஏற்றுஅரசுத்தூதராக நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்றார்.
அங்கு வீரப்பனையும், கடத்தப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசினார் நக்கீரன் கோபால். பின்னர் வீரப்பனின் 10 கோரிக்கைகள் அடங்கிய கேசட்டைகோபால் அனுப்பினார். அவற்றிற்கான தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பதில் வீரப்பனுக்கு அனுப்பப்பட்டன.
ஆனால் அக்கோரிக்கைகளுடன் மேலும் 4 கோரிக்கைகளை வீரப்பன் தெரிவித்தார். வீரப்பனின் புதிய கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு சென்னைதிரும்பினார் கோபால்.
வீரப்பனின் புதிய கோரிக்கைகளுக்கு தமிழக அரசும், கர்நாடக அரசும் பதில் அளித்துள்ளன.இந்த பதில்களை எடுத்துக் கொண்டு வீரப்பனைச் சந்திக்கநக்கீரன் கோபால் புதன்கிழமை காட்டுக்குச் செல்கிறார். வீரப்பனை சந்தித்து இரு மாநில அரசுகளின் பதில்களை அவர் எடுத்துரைப்பார். மேலும்பிணைக்கைதிகளை விடுவிக்கும்படி அவர் கோருவார்.
நக்கீரன் கோபாலின் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. வீரப்பனின் கோரிக்கைகளுக்கு கர்நாடக அரசின் பதில்களும்சென்னை வந்து சேர்ந்துவிட்டன. கோபாலுடன் அவரது நிருபர்கள் சிவசுப்ரமணியம், சுப்பு ஆகியோரும் காட்டுக்குச் செல்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பனை ஆகஸ்ட் 18 ம் தேதி கோபால் சந்தித்துப் பேசுவார் என்று கருதப்படுகிறது. இந்த முறை வீரப்பனின் மனதை மாற்றி பிணைக்கைதிகளுடன்அவர் திரும்புவார் என்று இரு மாநில அரசுகளும் எண்ணுகின்றன.












Click it and Unblock the Notifications