வேகமாக ஆரம்பித்து நிதானமாக...
டெல்லி:
சுதந்திர தின உரையை, வேகமாக ஆரம்பித்து நிதானமாக முடித்தார் பிரதமர் வாஜ்பாய்.
25 நிமிஷம் நீடித்த பிரதமரின் உரை மொத்தம் 12 முறை கைத்தட்டல் பெற்றது.வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட செங்கோட்டைக் கொத்தளத்தில் குண்டுதுளைக்காத கூண்டின் உள்ளே நின்று உரையாற்றினார் வாஜ்பாய்.
உரையைத் துவக்கியபோது பிரதமரின் குரல் உரத்து இருந்தது. போகப் போக, தனதுபேச்சின் சுருதியைச் சுருக்கிக் கொண்டு நிதானமானார் வாஜ்பாய்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர். அதை அபகரிக்க பாகிஸ்தான்நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்படும் என்று வாஜ்பாய் உரத்த குரலில்கூறியபோது, டெல்லியை அதிர வைத்தது கூடியிருந்தவர்களின் கை தட்டல்.
சிட்னி ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய அணிக்கு வாஜ்பாய் வாழ்த்துக்கூறியபோதும் கைத்தட்டல் காதைப் பிளந்தது.
இந்தியில் பேசினார் வாஜ்பாய். தனது பேச்சின்போது 12 ஆங்கில வார்த்தைகள், ஒருஉருது வார்த்தை, ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்வாஜ்பாய்.
பிரதமரின் சுதந்திர தின நிகழ்ச்சியில், மத்தியஅமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள்நரசிம்மராவ், தேவே கெளட, வி.பி.சிங், சந்திரசேகர் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள்கலந்து கொண்டனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் இருந்ததால் செங்கோட்டை மற்றும்டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வானில் ஹெலிகாப்டர்மூலமும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications