தேயிலை உற்பத்தி வீழ்ச்சி
கல்கத்தா:
இந்தியாவில் தேயிலை உற்பத்தி கடந்த வருடத்தை விட இந்த வருடம் 6.91 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் வரை 94.97 மில்லியன் கிலோவாக இருந்த தேயிலை உற்பத்தி இந்த வருடம் 88.41 மில்லியன் கிலோவாகக்குறைந்துள்ளது.
போதுமான அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் தேயிலை உற்பத்திகுறைந்துள்ளதாக மத்திய அரசின் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் கடந்த வருடம் 76.27 மில்லியன் கிலோவாக இருந்த தேயிலை உற்பத்தி இந்த வருடம் 71.70 மில்லியன் கிலோவாகக்குறைந்துள்ளது.
தென்னிந்தியாவில் 18.70 மில்லியன் கிலோவாக இருந்த தேயிலை உற்பத்தி இந்த வருடம் 16.71 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளது. ஆனால்,மொத்த தேயிலை உற்பத்தி அளவு முதல் ஆறுமாதத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்துள்ளது.
1999ம் வருடத்தின் முதல் ஆறுமாதத்தில் தேயிலை உற்பத்தி 265.86 மில்லியன் கிலோவாக இருந்தது. இந்த வருடம் 289.49 மில்லியன் கிலோஅதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் ஆறுமாதத்தில் தேயிலை உற்பத்தி வடஇந்தியாவில் 183.43 மில்லியன் கிலோவாக இருந்தது. கடந்த வருடத்தில், முதல் ஆறுமாதத்தில்தேயிலை உற்பத்தி 168.68 மில்லியன் கிலோ ஆகும்.
அதே போல் தென் இந்தியாவில் இந்த வருடத்தின் முதல் ஆறுமாதத்தில் தேயிலை உற்பத்தி 106.06 மில்லியன் கிலோவாக இருந்தது. கடந்த வருடத்தின்முதல் ஆறுமாதத்தில் தேயிலை உற்பத்தி 97.18 மில்லியன் கிலோ இருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications