உ.பி. ரயிலில் குண்டுவெடித்து 10 பேர் பலி
பைசாபாத் (உ.பி.):
உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
திங்கள்கிழமை இரவு 10.45 மணியளவில் ரோஸா கிராமம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது இந்த பயங்கரச் சம்பவம் நடந்தது. ரயிலின் கடைசிப் பெட்டியில்வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், முசாபர்பூர் நகரிலிருந்து அகமதாபாத் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது. இறந்த பயணிகளின் உடல்கள் பல அடி தூரத்திற்குச் சிதறிக் கிடந்தன.மிகவும் சக்தி வாய்ந்த குண்டு இது என்று போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு ரயில்வே, காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்துசென்றனர். மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு ரயிலும் அங்குஅனுப்பப்பட்டுள்ளது.
காயமடைந்த பயணிகள் லக்னோ மற்றும் பைசாபாத் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேருடைய நிலை கவலைக்கிடமாகஉள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி அதிர்ச்சிதெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கோழைத்தனமான ஒன்று என்றுஅவர் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications