"ஏரியா தகராறில் அவமானப்பட்ட தேசியக் கொடி

Subscribe to Oneindia Tamil

கோவை:

தேசியக் கொடி ஏற்றுவதில் நடந்த "ஏரியா தகராறில், ஒரு மணி நேரத்தில் தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கோவை 67 வது டிவிஷன் மருதாச்சலக் கவுண்டர் வீதியில் காங்கிரஸ் சார்பாக குடியரசுதின விழா கொடியை செவ்வாய்க்கிழமை, அதிகாலை 6.45 மணிக்கு அந்தப்பகுதியைச் சேர்ந்த சின்னத் தம்பி என்பவர் ஏற்றி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து 8 வது டிவிஷனைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் அங்கு கொடிஏற்றுவதற்காக வந்தார். ஆனால், ஏற்கனவே கொடி ஏற்றப்பட்டிருப்பதைக் கண்டஅவர் அதிர்ச்சியடைந்தார்.

"தன்னோட ஏரியாவில் தனக்குத் தெரியாமல் கொடி ஏற்றப்பட்டிருப்பது குறித்துஆத்திரமடைந்த சுப்ரமணியம், பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை இறக்கினார். ஏற்றப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே தேசியக் கொடிஇறக்கப்பட்டது. இறக்கிய கையோடு சுப்ரமணியம் அங்கிருந்து சென்று விட்டார்.

இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தேசியக்கொடி அவமதிப்பு தொடர்பாக சுப்ரமணியத்தின் மீது வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+