பாக். அதிகாரிகள் கொடுமையால் பைத்தியமாகும் இந்தியக் கைதிகள்

Subscribe to Oneindia Tamil

வாகா (இந்திய-பாக் எல்லை):

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியக் கைதிகள், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவதால் பைத்தியமாகும் நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள் என்று பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையடைந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

பல்வேறு புகார்களின் பேரில் பல இந்தியர்கள், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளால்கொடுமைப்படுத்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் கொடுமை தாங்காமல் பைத்தியம் பிடித்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்று விடுதலைஅடைந்த கைதிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று இந்தியர்கள் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள்,ஜம்முவில் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூர், குருதாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த பன்சிலால், பிகாரைச் சேர்ந்த ராம்பிலாஸ் ஆகியோர்.

கடந்த ஐந்து வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையடைந்துள்ளனர். இவர்களில் மன்சூர் கூறுகையில்,பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் சரியாகக் கவனிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு நல்ல உணவோ, மருத்துவ வசதியோஅளிக்கப்படுவதில்லை. தெருநாய்கள் போல் நடத்தப்படுகிறார்கள்.

மிக மிக கீழ்த்தரமாக நடத்தப்படுவதாலும், கொடுமைப்படுத்தப்படுவதாலும் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றனர். சிலர் பைத்தியம் பிடித்தநிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர் என்றார்.

மூன்று இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டதற்குப் பதிலாக ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு பெண் உள்பட 8 பாகிஸ்தானியர்கள் விடுதலைசெய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+