ஹெலிகாப்டரில் இலங்கை செல்லவுள்ள "ரங்கநாதர்
சென்னை:
இலங்கையில் கட்டப்படும் ரங்கநாதசுவாமி கோவிலில் வைக்கப்படவுள்ள ரங்கநாதர் சுவாமி சிலையினன் மூலவிக்கிரகம் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளது.
விக்ரகத்தை அமைத்துக் கொண்டிருக்கும் சிற்பி கணபதி ஸ்தபதி இதுகுறித்துக் கூறுகையில், கொழும்பிலிருந்து 10கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்துராஜாவளா என்ற இடத்தில் 200 கோடி ரூபாய் செலவில் ரங்கநாதசுவாமிகோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 18 அடி நீளமுள்ள மூல விக்ரகம் சென்னையில் வடிவமைக்கப்படுகிறது.இந்த விக்ரகம் ஒரே கல்லில் அமைக்கப்படுகிறது.
மூலவிக்ரகம் அமைக்கும் பணி, சென்னையை அடுத்த படகுமலைக் குப்பத்தில் நடந்து வருகிறது. இக்கோவிலின்ராஜகோபுரம் 150 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.
இதற்கான கல் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பல்மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்படும். ஐந்தாண்டுகளில் இந்தப் பணிகள் நிறைவுபெறும் என்றார் கணபதிஸ்தபதி.
எதற்காகஇலங்கையில் கோவில்?
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், காவிரிக் கரையில் அமைந்துள்ளது ரங்கநாதர் கோவில். இங்குகட்டப்பட்டுள்ள ராஜகோபுரம் ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரமாகும்.
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட நிலையில், அனந்த சயனனாக, பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார்ரங்கநாதர். அவர் பள்ளி கொண்டிருந்த நிலையில் அவரது பார்வை இலங்கையை நோக்கி இருப்பதால்இலங்கைக்கு அவரது அருள் பரிபூரணமாக இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் முடிவு பெறாமல் மொட்டை கோபுரமாக இருந்த ராஜகோபுரம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட பின், கோபுரம் ரங்கநாதரின் பார்வையிலிருந்து இலங்கையை மறைத்து விட்டதாகவும், இதனால்இலங்கைக்குக் கிடைத்து வந்த பெருமாளின் அருள்பார்வை தடைபட்டதாகவும் கூறப்பட்டது.
இதன் காரணமாகவே, பல காலமாக இலங்கையில் நடந்து வந்த இனக் கலவரம் உச்சமடைந்து உயிர்ச்சேதங்கள்அதிகமாகியது என்றும் கூறப்பட்டது. இதை நிவர்த்தி செய்வதற்காக இலங்கையில் தற்போது புதிய ரங்கநாதர்கோவில் கட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications