தமிழ் தீவிரவாதியை விடுவிக்க நீதிமன்றத்தில் அரசு மனு
சென்னை:
வீரப்பன் விடுவிக்க கோரிய 5 தீவிரவாதிகளில் ஒருவரான ரேடியோ வெங்கடேசனை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு இரண்டு மனுக்களை தடாநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தது.
திருவாரூர், குடவாசல், மன்னார்குடி ஆகிய மூன்று இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்களில் நடந்த குண்டு வெடிப்புக்களில் ரேடியோ வெங்கடேசனுக்குத்தொடர்புள்ளது. மேலும் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத் தாக்குதல் சம்பவத்திலும் தொடர்பு உண்டு. இதுதொடர்பாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், வெங்கடேசனை விடுவிப்பதற்காக அரசுத் தரப்பு வக்கீல் வி.மனோகரன் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுக்களில், வெங்கடேசனை விடுவிப்பது என திங்கள்கிழமை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தடா மற்றும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் வெங்கடேசன் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளை தடா நீதிமன்றம் வாபஸ் பெற வேண்டும். மேலும் அவரை விரைவில் விடுவிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட நீதிபதி எம்.சின்னபாண்டி விசாரணையை ஒத்தி வைப்பதாகக் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications