லோக்சபாவில் வீரப்பன்"
டெல்லி:
வீரப்பன் கோரிக்கைப்படி தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ்த் தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவிக்க உத்தரவிட்டது குறித்து லோக்சபாவில்வியாழக்கிழமை அ.தி.மு.க., தி.மு.க. எம்.பிக்கள் மோதிக்கொண்டனர்.
லோக் சபாவில் பூஜ்ய நேரத்தின் போது அ.தி.மு.க. தலைவர் பி.எச்.பாண்டியன் பேசுகையில், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் 53 வது சுதந்திர தினஉரையில் தற்போது அரசியல்வாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் ரகசியத் தொடர்பு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அரசியல்வாதிகள்ஒருபோதும் குற்றவாளிகளுக்குத் துணை புரியக் கூடாது என்று கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது. கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமெனில்தமிழகத்தில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழர் தேசிய விடுதலைப்படை மற்றும் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகளைவிடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளான் வீரப்பன்.
இதை ஒப்புக்கொண்டுள்ள தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 5 தமிழ் தீவிரவாதிகள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளவழக்குகளை வாபஸ் செய்ய உத்தரவிட்டுள்ளது. வீரப்பனை ஊக்குவிப்பது போல் உள்ள இந்த உத்தரவு கண்டிக்கத்தக்கது என்றார்.
பாண்டியன் பேச்சுக்கு தி.மு.க. எம்.பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை எப்படியும் மீட்கவேண்டும் என்பதுதான் தமிழக அரசின் முக்கிய நோக்கம். கர்நாடகத்தில் வாழும் அப்பாவிப் பொதுமக்களுக்கும், அங்கு வாழும் தமிழர்களுக்கும்எந்தப் பாதிப்பும் வராமல் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு கருதுகிறது.
இந்தப் பதட்டமான சூழ்நிலையை தமிழக, கர்நாடக அரசுகள் மிகக் கவனமாக சமாளித்து வருகின்றன என்று தெரிவித்தனர். இதையடுத்து சிறிது நேரம்அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களிடையே வாக்குவாதம் நீடித்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications