கிழக்கு ஆப்பிரிக்காவை சீரழிக்கும் பஞ்சம், உள்நாட்டுப் போர்
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் பெரும்பாலோர் உணவுப் பற்றாக்குறையால்அவதிப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக்கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுமார் 2 கோடி பேர் சரியான உணவு இல்லாமல் அவதிப்படுவதாகவும் இந்த ஆய்வில்தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பல நாடுகளில் வறட்சி நிலவுவதால் உணவு உற்பத்திஅறவே இல்லாமல் போய் விட்டது. மேலும், உள்நாட்டுப் போர், கலகங்கள்,தீவிரவாதிகளின் சண்டைகள் ஆகியவை காரணமாகவும் உணவுப் பொருட்களுக்குத்திண்டாட்டம் நிலவுகிறது.
பல நாடுகளில் விவசாயம் முற்றிலும் செயலிழந்து போய் உள்ளது. இதனால் உணவுஉற்பத்தி அறவே தடைபட்டுள்ளது.
அங்கோலா, புரூண்டி, எரித்ரியா, எத்தியோப்பியா, சியர்ரா லியோன், சொமாலியா ஆகியநாடுகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாக உள்ளன. இங்கு உள்நாட்டுப் போர்காரணமாக உணவு மற்றும் பிற துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் இங்கும்உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications