கல்லறைக்கு வழி காட்டும் கமறல் குரல்
லண்டன்:
வலுவிழந்த, வறண்ட குரலில் ஒருவர் பேசினால், அவர் தற்கொலை செய்யும்எண்ணத்தில் இருப்பதாக அர்த்தம் என்று லண்டனைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர்ஒருவர் கூறியுள்ளார்.
ஏல் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் சில்வர்மேன் என்ற மனோதத்துவநிபுணர்ஆராய்ச்சி மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளார்.தற்கொலை எண்ணம் தோன்றும்போது குரலின் ஒலி அளவும் குறையும் என அவர் கூறுகிறார்.
தற்கொலை என்பது ஒரு நொடியில் எடுக்கப்படும் தவறான முடிவாகும்.தோல்வியும்,விரக்தியும் தற்கொலைகளுக்கு தூண்டுகோலாக அமைகின்றன.
மனச் சோர்வு என்பது சுயபரிதாபத்தால் ஏற்படுவது.
மனச்சோர்வுடன் இருந்த 64 பேரிடம் ஸ்டீபன் ஆய்வு நடத்தினார். இவர்களுடன்மனச்சோர்வில்லாத 33 பேரிடம் ஆய்வு நடத்தினார். அப்போது, 64 பேரும்தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தனர். அவர்களது குரல்பொலிவிழந்து, வறண்டு இருந்தது.
தற்கொலைக்கான அறிகுறியாக இப்போது ஸ்டீபன் கண்டிபிடித்திருப்பது குரல் கம்மிப்பேசுவது. அவரது ஆராய்ச்சிப்படி தற்கொலை செய்து கொள்ளக்கூடிய எண்ணம்தோன்றக் கூடியவர்கள் குரல், உயிரெழுத்துக்களை உச்சரிக்கும் போது மேலும்குறையும்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடையவர்கள், உச்சக் கட்ட குரலில்பேசுவார்கள், அதே சமயம், உயிரெழுத்துக்களை உச்சரிக்குபோது அப்படியே குரல்ஒலி குறைந்து விடும். இத்தகைய போக்கில் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக அர்த்தம் என்கிறார் ஸ்டீபன். இப்படி ஒலி அளவுகுறைவதை கல்லறையின் குரல் என அழைக்கிறார் ஸ்டீபன்.












Click it and Unblock the Notifications