பெயிண்ட் கலந்த நீரைக் குடித்த 53 மாணவிகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே திருப்போரிலுள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த53 மாணவியர்கள் மற்றும் ஆசிரியைகள், பெயிண்ட் கலந்த கிணற்று நீரைக்குடித்ததால், மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிணற்று நீரைக் குடித்த மாணவிகளும், ஆசிரியைகளும் வாந்தி எடுத்துள்ளனர்.உடலிலும் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பின்னர்அனைவரும் வீடு திரும்பினர்.
கிணற்றுக்குள் போடப்பட்டுள்ள இரும்புக் குழாயில் பூசப்பட்டுள்ள பெயிண்ட்உதிர்ந்து கிணற்று நீரில் கலந்திருக்கலாம். அதனால் தண்ணீர் மாசடைந்திருக்கலாம்என்று போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications