இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது
சென்னை:
இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பணிபுரிபவர் தனபால்.ஒழுங்கீனங்களுக்கு உதாரணமாக திகழ்பவர்.
மூத்த அதிகாரிகளை மதிப்பதில்லை; பணியில் சரிவர கவனம் செலுத்துவதில்லை என்றுஇவர் மீது ஏகப்பட்ட புகார்கள், விசாரணைகள். அதன் காரணமாக இவரை நிரந்தரபணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
இச்சூழ்நிலையில் விழுப்புரத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிபதி வீட்டு பாதுகாப்புபணிக்கு தனபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பணியில் இருக்கிறாரா என்பதை சோதனையிடுவதற்காக ஆயுதப்படைஇன்பெக்டர் பாஸ்கரன் (இவர் விபத்தில் வலது கையை இழந்தவர்) மற்றும்போலீஸ்காரர் ஏசு ஆகிய இருவரும் நீதிபதி வீட்டுக்கு இரவு 9 மணியளவில்சென்றனர்.
அப்போது பணியில் இருக்க வேண்டிய தனபால் இல்லை. மீண்டும் 11 மணியளவில்இன்ஸ்பெக்டர் அங்கு சென்றார். அப்போது தனபால் சீருடை அணியாமல் இருந்தார்.அவரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். தனபால் எதிர்த்துப் பேசினார்.
மேலதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக உங்களை பணி நீக்கம்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனபாலிடம் அதற்கான உத்தரவைஇன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொடுத்தார்.
ஆத்திரமடைந்த தனபால், அந்த உத்தரவை கிழித்து எறிந்தார். அப்படியொரு உத்தரவுபோட்ட டி.எஸ்.பி. பாலதண்டாயுதபாணியை தரக்குறைவாக திட்டினார்.
அதோடு விடாமல் அருகில் குண்டுகள் லோடு செய்யப்பட்டு தயாராக இருந்த 303 ரகதுப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து இன்ஸ்பெக்டரை பார்த்துச் சுட்டார்.
அதை சற்றும் எதிர்பாராத இன்ஸ்பெக்டர் கீழே குனிந்து உயிரை காப்பாற்றிக்கொண்டார். ஆனால், அங்கிருந்தால் ஆபத்து என்று அறிந்து அவரும், உடன் வந்தபோலீசும் தப்பி ஓடி விட்டனர்.
இதற்கிடையில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு நீதிபதி தர்வேஷ் எழுந்து வெளியேவந்தார். அருகில் இருந்த மாவட்ட கலெக்டர் வீட்டிலும் சத்தம் கேட்டதால், அவரும்எழுந்தார். உடனடியாக போலீஸ் கண்காணிப்பாளருக்கு தகவல் போனது.
50 பேர் கொண்ட அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால், வெளியில்துப்பாக்கியுடன் வெறி பிடித்த நிலையில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் தனபால்,நெருங்கினால் சுட்டுத் தள்ளி விடுவேன் என்று "வீரப்பன் ஸ்டைலில் மிரட்டினார்.
இதையடுத்து பிடிக்க வந்த போலீஸ் படை அமைதி காத்தது. பின்னர் தனபாலுக்குநெருக்கமான சில போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் நெருங்கிச் சென்று அவரிடம்பேசி, அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நையப்புடைத்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications