சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிறது பா.ம.க

Subscribe to Oneindia Tamil

அடுத்து வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், கூட்டணியில் அதிக இடங்களைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில், பாட்டளி மக்கள் கட்சி தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளில்தி.மு.க.விற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சி பாட்டாளிமக்கள் கட்சிதான்.

ராஜிவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடியுடன் தொகுதிப் பங்கீட்டின் போதேமோதலை ஏற்படுத்திக் கொண்டது. தற்போது தமிழகத்தில் காலூன்றியுள்ள புதியக்கட்சிகளாகத் திகழ்வது ம.தி.மு.க.வும், பா.ம.கவும் தான். இரு கட்சிகளும் அதிகஅளவுத் தொண்டர்களைப் பெற்றிருக்காவிட்டாலும் மத்தியக் கூட்டணியில் இடம்பெற்றும அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளன.

வன்னியர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சிஉருவாகியிருந்தாலும், இப்போது அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெறவேண்டும் என்பதில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறது.

எனவே, கடந்த காலங்களில் ஒவ்வொரு கட்சியும் நடத்திய சுய விளம்பர யுக்தியைபாட்டாளி மக்கள் கட்சியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கட்சியும்தனக்கென ஒரு புதிய பாணியைத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, மற்ற கட்சிகள் கடைபிடித்த பாணியை ஆராய்ந்து, அதன் அடிப்படையில்தனக்கென ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளது.

ஊர் ஊராக ஊர்க் கூட்டம் போட்டு, மாநாடாக அறிவித்து கிராமந்தோறும் ஆதரவுதிரட்டும் பணியில் இக்கட்சி இறங்கியுள்ளது.

பொதுமக்களின் குறைகளை நேரடியாக கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் முயற்சிஇக்கட்சியின் புது யுக்தியாக இருந்தாலும், குறைகளை இவர்களிடம் சொல்ல யாரும்ஆர்வம் காட்டவில்லை.

மறுமலர்ச்சி தி.மு.கவை வளர்க்க, கிராமந்தோறும் வைகோ நடைப் பயணம்மேற்கொண்டார். இதே போல், ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல, பாட்டாளி மக்கள்கட்சியின் தலைவர் ராமதாஸ் திட்டமிட்டு, மாநாடு நடத்துகிறார்.

இதற்கு முன், "மக்கள் தரிசனம் என்ற பெயரில், மூப்பனார் கிராமந்தோறும் செல்லமுயன்றார். ஆனால் இது வெற்றி பெறவில்லை.

தற்போது பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு அவ்வளவுவரவேற்பு இல்லை என்றாலும், கிராமந்தோறும் பெயரைச் சொல்லும் அளவிற்காவதுகட்சியை வளர்க்க முடியும் என்பது ராமதாசின் கணக்கு.

இந்நிலையில், அடுத்து வரும் தேர்தலில் பாட்டளி மக்கள் கட்சி அதிக இடங்களைப்பெற வேண்டும் என்ற முயற்சியில், ராமதாஸ் இறங்கியுள்ளார். வேட்பாளர்களைத்தேர்வு செய்யும் பணியில் கூட இப்போதே தொடங்கி விட்டார் என கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியில் எவ்வளவு தான் தி.மு.க.,வுடன் கூட்டணி நீடிக்கும் எனக் கூறினாலும்,ராமதாசுக்கு உள்ளூர ஒரு சந்தேகம் நீடிக்கிறது. அது அவர் கேட்கும் அளவிற்கு சீட்கிடைக்குமா என்பது தான். தி.ம.க. தலைவர் கருணாநிதி, வளரும் கட்சி எதுவாகஇருந்தாம் அதை உடைத்து விடுவார் என்பது ராமதாசின் எண்ணம்.

எனவே, கூட்டணியில் மிகவும் கவனமுடன் செயல்படும் கட்சியாக பாட்டாளி மக்கள்கட்சி இருந்து வருகிறது. எல்லாப் பிரச்னைகளையும் ராமதாஸ், வைகோவைப்போலவே மிகவும் கவனடன் கையாண்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+