கலெக்டர் வீட்டு வாசலில் டுமீல் .. டுமீல்
விழுப்புரம்:
மேல் அதிகாரியைப் பார்த்து சல்யூட் அடிக்காத போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உத்தரவைக்கொண்டு வந்த இரண்டு போலீஸ்காரர்களை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் துரத்தித் துரத்தித்துப்பாக்கியால் சுட்டார்.
விழுப்புரம் மாவட்டக் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆயுதப்படையைச் சேர்ந்த தனபால் என்பவர் பணியாற்றிவருகிறார். சமீபத்தில் விழுப்புரம் நகர டி.எஸ்.பி.பாலதண்டாயுதம் அலவலகத்திற்குள் நுழைந்த போது தனபால்சல்யூட் அடிக்கவில்லை.
சல்யூட் அடிக்காததற்கான காரணத்தை பிற போலீஸ்காரர்கள் கேட்டபோது, டி.எஸ்.பி. பாலதண்டாயுதத்தைதாறுமாறாகத் திட்டினார் தனபால். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட பாலதண்டாயுதம் ஆயுதப்படை மேல்அதிகாரிகளிடம் புகார் கூறினார்.
இதையடுத்து ஆயுதப்படை உயர்அதிகாரிகள் தனபாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவைபோலீஸ்காரர்கள் பாஸ்கர் மற்றும் இயேசு ஆகியோர் கொண்டு சென்றனர்.
இதற்கிடையே தனபால் கலெக்டர் வீட்டுக் காவல்பணிக்கு மாற்றப்பட்டார். இதனால் பாஸ்கரும், இயேசுவும்சஸ்பெண்ட் உத்தரவை கலெக்டர் வீட்டுக் காவல் பணியில் இருக்கும் தனபாலிடம் கொடுக்கச் சென்றனர்.
சஸ்பெண்ட் உத்தரவைக் கண்டதும் ஆத்திரமடைந்த தனபால் கையிலிருந்த துப்பாக்கியால் போலீஸ்காரர்கள்இருவரையும் நோக்கி சராமரியாகச் சுட ஆரம்பித்தார். இதனால் பாஸ்கரும், இயேசுவும் ஓட ஆரம்பித்தனர்.அவர்களைத் தாறுமாறாகத் திட்டியவாறு துப்பாக்கியுடன் துரத்திச் சென்றார் தனபால்.
கலெக்டர் வீட்டு வாசலில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு கலெக்டரே அதிர்ச்சியடைந்தார். அவர் உடனேதனபாலைக் கைது செய்யும்படிக் கூறினார். இதையடுத்துப் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications