தீவிரவாதிகள் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கோரிக்கையை ஏற்று 5 தீவிரவாதிகளை விடுவிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். மனுவில், வீரப்பனின் கோரிக்கையை ஏற்று 5தடா கைதிகளை விடுவிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
தடா கைதிகளை விடுதலை செய்வது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது. இதில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்றும் மனுவில் அவர்கூறியிருந்தார். இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.கே.ஜெயின், நீதிபதி ரவிராஜ்பாண்டியன் ஆகியோர் மனுவைவிசாரித்தனர்.
பொதுநலன் கருதி அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications