காஞ்சி சுவாமிகளிடம் ஆசி பெற்ற ராஜ்குமார் மகன்கள்
காஞ்சீபுரம்:
நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் சிவராஜ்குமார் ஆகியஇருவரும் புதன்கிழமை காஞ்சீபுரத்தில் சங்கராச்சாரியார்களைச் சந்தித்து ஆசிபெற்றனர்.
புதன்கிழமை சென்னையிலிருந்து காஞ்சீபுரம் சென்ற இருவரும் காஞ்சி மடத்திற்குச்சென்றனர். அங்கு, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள தங்களது தந்தை விரைவில் வீடு திரும்ப ஆசி வழங்கவேண்டும் என்று அப்போது சங்காராச்சாரியர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.அப்படியே நடக்கும் என்று கூறி அவர்களை இரு சங்காராச்சாரியார்களும்வாழ்த்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்குமார் மகன்கள் பேசுகையில், எங்களது அம்மாவின்வேண்டுதலின்பேரில் காஞ்சி சுவாமிகளைத் தரிசித்தோம். தந்தை நலமாகத் திரும்பியபிறகு அம்மா மற்றும் அப்பாவுடன் மீண்டும் வந்து சுவாமிகளைத் தரிசிப்போம்என்றனர்.












Click it and Unblock the Notifications