தொழிலதிபர் வீட்டில் ரூ. 2 லட்சம் வைர நகைகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
கோவை:
பிரபல தொழிலதிபர் வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருடு போனது.
கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் சிவராம் நகர் உள்ளது. இங்கு தொழிலதிபர் சம்பத் குடியிருந்து வருகிறார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் யாரோ வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வைரக் கம்மல், 7 பவுன் நகை, 6 பவுன் தங்கவளையல்கள், அரைக் கிலோ வெள்ளி ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டனர்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications