பெங்களூரில் கூடுகிறது கிரிக்கெட் வாரிய செயற்கமிட்டி
பெங்களூர்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற் கமிட்டி கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளை அடுத்து கிரிக்கெட் ஆட்டத்துக்கான புதிய நெறிமுறைகளை இறுதி செய்வது குறித்தும், கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல அம்பயர்கள், அணியின் அதிகாரிகள், நிர்வாகிகள் ஆகியவர்களுக்கான புதிய நெறிமுறைகளை மூன்று பேர் கொண்டகமிட்டி உருவாக்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த புதியநெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல், விளையாடிக் கொண்டிருந்தபோதோ அல்லது விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகோ கிரிக்கெட் வீரர்களோ, அம்பயர்களோ, அணியின்அதிகாரிகளோ மேட்ச் பிக்ஸிங் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இக் கூட்டத்துக்கு முன்பாக வாரியத்தின் நிதி கமிட்டிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications