கட்டடத் தொழிலாளர் நிதி உதவியை அதிகரிக்கக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கட்டடத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசேஷ கால நிதி உதவியின் அளவை உயர்த்த வேண்டும் எனகட்டடத் தொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடந்தது. 3 நாள் நடக்கும் இந்தமாநாட்டில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் நல்லகண்ணு கலந்து கொண்டார்.

கோவையில் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் மாநாடு ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கியது. இதனையொட்டிபேரணி மற்றும் ஊர்வலம் நடந்தது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை மாநாட்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கட்டடத் தொழிலாளர்களுக்கு அரசின் இ.எஸ்.ஐ., மற்றும் பென்ஷன் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.இதுவரை வழங்கப்பட்டு வந்த பிரசவ கால நிதியுதவி, இறுதிச் சடங்கிற்கான நிதியுதவிகளை அதிகரிக்க வேண்டும்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிதியுதவி போன்று, கட்டடத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+