இந்திய ஹாக்கி வீரர்களுக்கு "கிராஃபைட் மட்டைகள்"
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் அடுத்து மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ள இந்திய ஹாக்கி அணியினருக்கு கிராஃபைட்டால்தயாரிக்கப்பட்ட மட்டைகள் வழங்கப்படவுள்ளன.
இதுவரை பயன்படுத்தி வந்த மரத்தாலான மட்டைகளுக்குப் பதிலாக இந்த கிராஃபைட் மட்டைகள் வழங்கப்படவுள்ளன. இந்திய அணி வீரர்களுக்குவழங்கப்படவுள்ள பி கிரேடு மட்டைகளின் விலை ரூ. 6,500 ஆகும். ஏ கிரேடு மட்டைகளின் விலை ரூ. 8,000.
முதன்முறையாக இந்திய அணியினர் பயன்படுத்தப்படவுள்ள இந்த கிராஃபைட் மட்டைகள் பாகிஸ்தானில் சியால்கோட் நகரில் தயாரிக்கப்படுகின்றன.
மரத்தாலான மட்டைகள் இரண்டு அல்லது மூன்று பாகங்களைக் கொண்டது. ஆனால், கிராஃபைட் மட்டைகள் ஒரே பாகமாக இருக்கும். கருப்புக்கலரில் இந்த மட்டைகள் உள்ளன.
பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் முகேஷ் குமார், தன்ராஜ் பிள்ளை, ரமன்தீப் சிங், முகம்மது ரியாஸ், பல்ஜீத் சிங் செய்னி ஆகியோர்கிராஃபைட் மட்டைகளைப் பயன்படுத்தினர்.
கிராஃபைட் மட்டைகளுடன் விளையாடியது குறித்து இந்திய அணி வீரர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மரத்தாலான மட்டையை விட இந்த கிராஃபைட் மட்டை நன்றாக உள்ளது என்று லெப்ட் விங்கர்" முகேஷ் குமார் தெரிவித்தார். பந்தை நன்கு அடித்துவிளையாட இந்த மட்டை உதவுகிறது. மேலும், இந்த மட்டை அதிக பளுவானதும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த கிராஃபைட் மட்டையால் உடலில் அடிபட நேர்ந்தால் அது மோசமாக இருக்கும் என்றார் முகம்மது ரியாஸ். இந்தக் குறைபாட்டைத்தவிர கிராஃபைட் மட்டைகள் அனைத்து விதத்திலும் சிறப்பானதாகவே கருதப்படுகிறது.
பயிற்சி முகாமில் இதைப் பயன்படுத்திய 5 வீரர்களின் கருத்துகளை அடுத்து இந்திய அணியினர் அனைவருக்கும் கிராஃபைட் மட்டைகளை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்ளச் செல்லும் இந்திய அணியினர் மரத்தாலான மட்டைகளையும், கிராஃபைட் மட்டைகளையும் உடன் எடுத்துச்செல்வர். பயிற்சி ஆட்டங்களில் மரத்தாலான மட்டைகளை அவர்கள் பயன்படுத்துவர்.
மரத்தாலான மட்டைகளை விட இந்த கிராஃபைட் மட்டைகள் நீண்ட நாட்களுக்கு வரும். ஒழுங்காகப் பராமரித்தால் சுமார் 5 ஆண்டுகளுக்கு இந்தகிராஃபைட் மட்டைகளைப் பயன்படுத்தலாம் என்றார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகேஷ் குமார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications