மத்திய ஆசியாவைக் குறி வைக்கிறது தலிபான்
மாஸ்கோ:
மத்தியஆசிய நாடுகளில் தீவிரவாதத்தைப் பரப்பும் வேலையில் தலிபான் அமைப்புமும்முரமாகியுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் நோவோஸ்தி கூறியுள்ளது.
தலிபான்களின் இப்போதைய இலக்கு உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியமுன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் என்றும் நோவோஸ்தி கூறியுள்ளது.
சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் எல்லைக்குள்தீவிரவாதிகள் ஊடுறுவினர். அவர்களுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும்இடையே கடும் சண்டை நடந்தது. இறுதியில் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த சண்டையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட அடையாளஅட்டைகள் மூலம் அவர்களுக்கும் தலிபான் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதுதெரிய வந்தது. தீவிரவாதிகள் அனைவரும் அரபு, செச்னிய, ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்தவர்கள்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஜூம்பாய் நமங்கானி என்பவர் தலைமையில் இயங்கும்உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிக் யூனியன்தான் இந்த சண்டையில் தீவிரவாதிகளுக்குத்தலைமை வகித்தது. உலகிலேயே நான்காவது பெரிய தீவிரவாத அமைப்பு என்றுபெயர் பெற்றது இந்த யூனியன்.
உஸ்பெகிஸ்தானின் வளமான பகுதியான பர்கானா பள்ளத்தாக்கைப் பிடிக்கும்அவர்களது திட்டத்தை உஸ்பெகிஸ்தான் ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இதையடுத்துஎஞ்சிய தீவிரவாதிகள் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்குத் தப்பிவிட்டனர்.
தற்போது நடந்துள்ள புதிய ஊடுறுவல் மூலம் மத்திய ஆசியாவில் தனது தீவிரவாதசெயல்களை அதிகப்படுத்த தலிபான் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகநோவோஸ்தியின் அரசியல் பார்வையாளர் வலன்டின் குனின் கூறியுள்ளார். அவர்கூறுகையில், கடந்த ஆண்டு தாஜஸ்தான் தலைநகருக்குள் ஊடுறுவ தீவிரவாதிகள்முயன்றனர். இப்போது உஸ்பெகிஸ்தானுக்குள் ஊடுறுவியுள்ளனர். ஏற்கனவேசெச்னியாவில் போரிட்டு வருகின்றனர் என்றார் அவர்.
இதற்கிடையே, தீவிரவாதிகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைக்கும் ரஷியாஉதவும் என்று முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளக்கு ரஷிய அதிபர் விலாடிமிர்புடின் உறுதியளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications