3 மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் 29 அதிமுகவினருக்கு காவல் நீட்டிப்பு
கிருஷ்ணகிரி:
கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள் 3 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 29 அதிமுகவினரின் காவல் ஆகஸ்ட்31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம்தேதி தீர்ப்பு வழக்கப்பட்டது. தீர்ப்பில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.அப்போது தர்மபுரியில் ஒரு பஸ்ஸை அதிமுகவினர் வழிமறித்து பெட்ரோல் ஊற்றிஎரித்தனர்.
கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்குச் சொந்தமான அந்த பஸ்ஸில் அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுற்றுலா வந்தனர். பஸ் எரிப்பின்போது 3 மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.
இது தொடர்பாக 33 அதிமுகவினர் மீது கிருஷ்ணகிரி கூடுதல் முதன்மை குற்றவியல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் மாது, கோவிந்தசாமி, ரவி, முருகன்ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
மற்ற 29 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்த 29 பேரிடமும் உங்கள் சார்பாக வாதாட தனித்தனி வழக்கறிஞர்கள்வேண்டுமா அல்லது ஒரே வழக்கறிஞர் வேண்டுமா என்று நீதிபதி அக்பர் அலிகேட்டார்.
அதற்கு அவர்கள் நாங்கள் யோசித்துச் சொல்கிறோம் என்று பதிலளித்தனர். மேலும்தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை நகல் பக்கங்கள் வரிசையாகஇல்லாததால் குழப்பமாக உள்ளது. அதில் உள்ள ஆங்கில வார்த்தைகள் புரியவில்லைஎன்று கூறினர்.
இதையடுத்து அவர்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்யும்படி அதிகாரிகளுக்குஉத்தரவிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 பேருடைய காவலை ஆகஸ்ட் 31-ம்தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications