பயிற்சியாளர் பதவி முடிந்ததும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - கபில் தேவ் அறிவிப்பு
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் பதவிக் காலம் முடிந்தவுடன் சர்வதேசகிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவேன் என்று கபில் தேவ் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப்பெற்றுத் தந்தவருமான கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளைவீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
அந்த சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் வால்ஷ் சமீபத்தில்தான்முறியடித்தார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் கபில் தேவ் உள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட்வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோர் மீது மேட்ச்பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
கபில் தேவ் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. குற்றச்சாட்டுகள்தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், இக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் சமீபத்தில் இந்தியா முழுவதும்உள்ள சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கபில் தேவின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.இதையடுத்து அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பலர்கோரினர்.
ஆனால், தன் மீது எந்த குற்றமும் இல்லை என்ற கபில்தேவ், பயிற்சியாளர்பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று அறிவித்தார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசியபோதும் அவர் இதைத் திட்டவட்டமாகத்தெரிவித்தார். நான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு போதும் ஈடுபடவில்லை.
யாருக்கும் பயந்து ஓடி ஒளியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக் காலம் முடிந்தவுடன்கிரிக்கெட்டிலிருந்து முழுமையா ஓய்வு பெறுவேன். அதுவரை யார் நிர்பந்தத்தின்பேரிலும் நான் பதவி விலகமாட்டேன்.
மேலும் அது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் முடிவுசெய்யவேண்டும் என்றார் கபில்தேவ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications