சாலையோரம் நடந்த வாழப்பாடியின் வன்னியர் சங்கக் கூட்டம்
சென்னை:
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மண்டபம் கிடைக்காததால், வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவு வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் சாலையோரம்நடத்தப்பட்டது.
ராமதாசுக்கு போட்டியாக வாழப்பாடி ராமமூர்த்தி வன்னியர் சங்கம் நடத்தி வருகிறார். அந்த சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு மாநாடு நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடக்கவிருந்தது.
வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னியர் அடிகளார், தமிழ் பா.ம.க. தலைவர் தீரன் மற்றும் வன்னியர் தலைவர்கள் கலந்து கொள்வதாக இருந்த இந்தகூட்டத்திற்கு சென்னையில் ஒரு தனியார் திருமண மண்டபம் "புக் செய்யப்பட்டிருந்தது.
கூட்ட ஏற்பாடுகளை வாழப்பாடி ஆதரவாளர்கள் சந்திரன், தியாகு என்பவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஆனால், கூட்டத்திற்கு ஓரிரு நாட்கள் முன்இருவரையும் திடீரென்று காணவில்லை.
இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதோடு நிற்காமல், வாழப்பாடிக்கு கூட்டம் நடத்த மண்டம் கொடுத்தால் வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என்று தொலைபேசியில் மிரட்டல்வந்ததால், மண்டப உரிமையாளர் இடம் தர மறுத்து விட்டார்.
இதையடுத்து வேறு வழியின்றி சாலையோரத்தில் "சாமியானா பந்தல் போடப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. வன்முறை ஏற்படலாம் என்பதால்வாழப்பாடி ராமமூர்த்தி மட்டும் வரவில்லை. மற்றவர்கள் பங்கேற்றுப் பேசினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications