For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோகுலாஷ்டமி:

By Staff
Google Oneindia Tamil News

கிருஷ்ண பிரான் அவதார தினம்தான் கோகுளாஷ்டமி. இன்று செவ்வாய்க்கிழமையன்று ( 22.08.2000) கொண்டாடப்படுகிறது.

அந்தப் பண்டிகை கொண்டாடப்படும் விதம் பற்றிய விவபரங்கள்.

கோகுலாஷ்டமி:

தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவன் கிருஷ்ணபரமாத்மா. அவர் ஜனித்த (பிறந்த)புண்ய தினமே கோகுலாஷ்டமி தினமாகும்.

கிருஷ்ண ஜனனம் பற்றி ஒரு சுவரஸ்யமான புராண கதை:

கண்ணனின் மாமன் கம்சன். அவன் கிருஷ்ணரின் தந்தை வசுதேவரையும், கிருஷ்ணரின் தாய் தேவகியையும் சிறையில் அடைத்து வைத்திருந்தான். தேவகிக்குபிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் இருந்ததால் அவன் அவர்களை சிறையில் அடைத்து பிறந்து வரும்எல்லா குழந்தைகளையுமே கொன்று வந்தான்.

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரித்தார். அந்தக் குழந்தையை வசு தேவர் கோகுலதில் இருக்கும் தன் நண்பர் நந்த கோபன் வீட்டில் வளரவைப்பதற்காக கொட்டும் மழையில் ஒரு கூடையில் வைத்து எடுத்துச் சென்றார்.

அதே சமயம் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட கம்சன் குழந்தையை கொல்ல வருகிறான். அங்கு கிருஷ்ணனுக்கு பதிலாக அம்மன் குழந்தை ரூபத்தில்இருந்தார். கம்ச ன் அந்தக் குழந்தையை கொல்வதற்காக மேலே தூக்கி போட்ட போது அந்தக் குழந்தை மேலே சென்று கம்சா உன்னனக்கொல்வதற்காக பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. உனக்கு மரணம் அந்தக் குழந்தையால் தான் என்று கூறி மறைந்தது.

இந்த கோகுளாஷ்டமி நாளன்று வீட்டில் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசிமாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலைவரைவர். அதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் லருவதாகப் பொருள்.

கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெயும் அவலும் வெல்லச்சீடை உப்புச்சீடை போன்ற நிவேதப் பொருளுடன் சிறப்பான இடம் பிடிதிதருக்கும், கோகுலத்தில்கண்ணன் கோபியர் வீடுகளில் வெண்ணெய் திருடித் தின்று லீலைகள் செய்தவன். கண்ணனது பால்ய சிநேகிதன் குசேலர் கண்ணனைக் காண வரும் போது அவர்கொண்டுவந்த அவலை கண்ணன் உண்ட போது குசேலரது வறுமை மறைந்து வளம் பெற்றதாகவும் புராணங்கள் மூலம் அறிகிறோம் . எனவே தான்வெண்ணெய்க்கும், அவலுக்கும் நிவேதனத்தில் சிறந்த இடம்.

இந்த பண்டிகை தினத்தன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷபூஜைகள் நடைபெறும்.

இன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X