தவெக அரசின் காலை சுற்றும்.. மின்வெட்டு பிரச்சனை! என்ன செய்யப்போகிறார் விஜய்? நிர்மல்குமார் விளக்கம்
சென்னை: ஏராளமான சவால்களோடு தவெக அரசு புதியதாக பொறுப்பேற்றிருந்தது. இப்படி இருக்கையில், மின்வெட்டு பிரச்சனை பெரியதாக வெடித்திருக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கோடை காலத்திலும் மின்வெட்டு பிரச்சனை தீவிரமாக இருக்கும். இந்த கோடையிலும் பிரச்சனை கையை மீறி சென்றிருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால், நிர்வாக ஒழுங்குமுறையில் ஏற்பட்டிருக்கும் தொய்வு இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மின்வெட்டு மற்றும் நீண்ட நேர மின்வெட்டு மக்களை பாதித்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் டென்ஷன் ஆன மக்கள், நேரடியாக துணை மின் அலுவலகங்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில், இந்த பிரச்சனையை சரி செய்வது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்திருந்தார்.
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை என்றும், போதிய அளவு மின்சாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதேநேரம், பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பங்கள்தான் மின்வெட்டுக்கு காரணம் என்றும் கூறியிருந்தார். மேலும், மின்துறையை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும், 1.4 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் வெறும் 40 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் எனவும் நிர்மல்குமார் கூறியிருக்கிறார்.
-
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்!












Click it and Unblock the Notifications