மரண விளிம்பில் 3 ராணுவ அதிகாரிகள் ‘செல்பி'.. விபத்தில் நொறுங்கிய ஹெலிகாப்டர் அருகே திக்திக்.. யப்பா
ஜம்மு காஷ்மீர்: லடாக்கின் டாங்ஸ்டே மலைப்பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென்று எதிர்பாராத விதமாக மலையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ அதிகாரிகள் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, மரண விளிம்பிலும் மனம் தளராமல் கூலாக எடுத்து கொண்ட 'செல்பி' போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் அருகே லடாக் மலை பிரதேசமாக உள்ளது. இங்கு அடிக்கடி ராணுவ அதிகாரிகள் ராணுவ ஹெலிகாப்டரில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இது மிகவும் மோசமான இடமாகும். அடிக்கடி மோசமான காலநிலை உருவாகும். இதனால் அடிக்கடி ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்து வீரர்கள் மரணிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் லே மலையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் இருந்து உயிர் பிழைத்த 3 ராணுவ அதிகாரிகள் கூலாக எடுத்த 'செல்பி' போட்டோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:
ஆபத்து நிறைந்த லடாக்கின் மலை பிரதேசத்தில்
கடந்த 20ம் தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சீட்டா ரக ஹெலிகாப்டரில் மொத்தம் 3 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா (3வது Infantry Division தளபதி), உடன் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் மேஜர் ஆகியோர் பயணித்தனர். இதில் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் மேஜர் ஆகியோர் ஹெலிகாப்டரை இயக்கினர். பயணி போல் மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா உடனிருந்தார்.
அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலை பிரதேசத்தில் விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டர் சுக்கு சுக்காக நொறுங்கியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக 3 ராணுவ அதிகாரிகளும் உயிர் தப்பினர். அவர்கள் லேசாக காயங்கள் மட்டும் அடைந்தனர். இந்த விபத்து கடந்த 20ம் தேதி நடந்தது. விபத்து குறித்த அறிவிப்பு இன்று காலையில் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தற்போது சமூக வலைதளங்களில் போட்டோ ஒன்று பரவி வருகிறது. விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்து 'செல்பி' எடுத்த போட்டோ தற்போது பரவி வருகிறது. அதில் மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா தன்னுடன் பயணித்த 2 அதிகாரிகள் மற்றும் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரை சேர்த்து செல்பி எடுத்துள்ளார். அந்த போட்டோவில் நொறுங்கிய ஹெலிகாப்டரின் அருகே அதிகாரிகள் பாறையில் அமர்ந்து உள்ளனர். இதுதான் கவனம் பெற்றுள்ளது. சவால் நிறைந்த மலைப்பகுதியிலும், பழமை வாய்ந்த ஹெலிகாப்டரில் பயணித்து விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
தற்போது விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டர் கடந்த 1970களில் அறிமுகப்படுத்தப்பட்ட சீட்டா ரகத்தை சேர்ந்தது. 1984ல் சியாச்சின் பனிப்பாறையில் பாகிஸ்தான் வீரர்களை எதிர்த்துப் போராடிய 'மேகதூத்' நடவடிக்கையின்போது இந்த ஹெலிகாப்டர் நம் நாட்டின் ராணுவத்துக்கு பெரிய அளவில் கைக்கொடுத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு விபத்துகளில் இந்த ஹெலிகாப்டர் சிக்கி வருகிறது. பலர் மரணமடைந்துள்ளனர். இப்போது மீண்டும் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உள்ளதால் அதன் பாதுகாப்ப கேள்விக்குள்ளாகி உள்ளது.
தற்போது நம் படை வீரர்கள் இந்த பழமையான ஹெலிகாப்டரை படிப்படியாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த ஹெலிகாப்டர்களுக்கு பதில் நம் நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் உள்நாட்டு கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் (LUH) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 ஹெலிகாப்டர்களை ராணுவம் ஆர்டர் உள்ளது. இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 220 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 6.5 கி.மீ உயரம் வரை பறப்பதோடு, 350 கி.மீ இயக்க வரம்புடன் செயல்படும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications