செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் போடலையாமே.. சொதப்பிய அதிகாரிகள்.. விஜய் அப்செட்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வந்த நிலையில்.. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மோசமாக சொதப்பி உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய் இதனால் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக எழுந்த புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

senthil balaji

செந்தில் பாலாஜி வழக்கு பின்னணி

செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கிற்கு பின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா என்பவர் கொடுத்த புகார் முக்கிய காரணமாக உள்ளது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், கருத்துக்கணிப்பு நிறுவனம் மற்றும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரும், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க, எம்.எல்.ஏ இளையராஜாவிற்கு ரூ.25 கோடி தருவதாக இவர்கள் பேரம் பேசியுள்ளனர். இது தொடர்பான ஆடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சென்னை திருவல்லிக்கேணி போலீசார், முதற்கட்டமாக அரும்பாக்கம் திருநாவுக்கரசு மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான மேடவாக்கம் தியாகராஜன், பெசன்ட் நகர் கார்த்திக் ஆகிய மூவரைக் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மணப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வன் மற்றும் ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

செந்தில் பாலாஜிக்கு சம்மன்

கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த விசாரணையில், ஆட்சியை கவிழ்ப்பதற்காக மொத்தம் ரூ.40 கோடி அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது அம்பலமானது. மேலும், இந்த ஒட்டுமொத்த சதித் திட்டத்திற்கும் பின்னணியில் மாஸ்டர்மைண்டாக செயல்பட்டது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தான் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில்தான் செந்தில் பாலாஜியை கைது செய்ய விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரிடம் விசாரணை நடத்த போலீசார் முற்பட்டபோது, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் தங்களைத் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டதாக திருவல்லிக்கேணி போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே திங்கள் கிழமை வரை சம்மனுக்கு பதில் அளிக்க நேரம் உள்ள நிலையில்.. திடீரென அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் 'லுக் அவுட்' நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் இதில் அதீத வேகம் காட்டி வருகிறது. போலீஸ் காட்டும் வேகத்தை வைத்து பார்க்கும் போது செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லுக் அவுட் நோட்டீஸ் சொதப்பல்

இந்த லுக் அவுட் நோட்டீஸ் செய்தி கடந்த இரு நாட்களாக பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் குறித்த எந்த ஆர்டரும் இந்திய விமான நிலையங்களுக்கு சொல்லப்படவே இல்லையாம். தமிழக போலீஸ் கிளப்பிவிட்டிருக்கிறது.

லுக் அவுட் நோட்டீஸ் குறித்த எந்த அறிவிப்பும் விமான நிலையங்களிலிருந்து கொடுக்கப்படவில்லை என்று ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உண்மையில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதா.. அல்லது அதெல்லாம் வெறும் வதந்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் சொதப்பி வருவதால் விஜய் கடுமையாக அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+