Kamal Haasan: கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவன மேலாளரிடம் பாஸ் ஸ்கேம்! ரூ.38 லட்சம் மோசடி செய்ய முயற்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன மேலாளரிடம் ரூ 38.50 லட்சம் மோசடி செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம் தயாரிப்பு நிறுவனம் (RKFI). இங்கு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார் முரளி கிருஷ்ணன்.

Kamal Haasan

இந்த தயாரிப்பு நிறுவனம் ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

கடந்த ஜூலை 2ஆம் தேதி முரளி கிருஷ்ணனின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு புதிய எண்ணில் இருந்து மெசேஜ்கள் வந்தனவாம். அதில் ராஜ்கமல் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவரின் வாட்ஸ் ஆப் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள், அவரது புகைப்படத்தை தாங்கள் தொடர்பு கொண்ட எண்ணிற்கு வைத்திருந்தனராம்.

அப்போது அந்த தயாரிப்பாளர் பேசுவது போல் மர்ம நபர்கள் முரளிக்கு மெசேஜ் அனுப்பினராம். அதில் தனக்கு அவசர தேவை இருப்பதால் தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு ரூ 38.50 லட்சம் ரூபாயை உடனடியாக அனுப்புமாறு மெசேஜ் அனுப்பியிருந்தனர்.

மெசேஜில் வந்த டிபியில் அந்த தயாரிப்பாளரின் புகைப்படம் இருந்தாலும் அவருடைய எண்ணில் இருந்து வராமல் வேறு எண்ணிலிருந்து ஏன் பணம் கேட்கிறார் என முரளிக்கு சந்தேகம் எழுந்தது.

மேலும் இது பாஸ் ஸ்கேம் எனப்படும் ஆன்லைன் ஆள்மாறாட்ட மோசடி என்பதை கண்டறிந்தார். இதையடுத்து பணத்தை அனுப்பாமல் முரளி, நேராக சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் ஆள்மாறாட்டம், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மோசடி கும்பல் முரளிக்கு போன் செய்ய பயன்படுத்திய நம்பர் உள்ளிட்ட விவரங்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாஸ் ஸ்கேம் என்றால் என்ன என்பதை சைபர் கிரைம் விவரித்துள்ளது. அதாவது உங்களது நிறுவன அதிகாரிகள், மேனேஜர்கள், தெரிந்தவர்களின் புகைப்படங்கள் வாட்ஸ் ஆப் டிபியாக வைத்துக் கொண்டு மெசேஜ் மூலம் பணம் கேட்டு அனுப்புவார்கள். இதை யாரும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாறாமல் போலீஸில் புகார் அளியுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+