சீனாவில் இரும்பாலையில் வெடிவிபத்து - 14 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
சீனாவில், ஜியாங்சி மாகாணத்தில் உள்ள இரும்பு உருக்காலை ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர்படுகாயமடைந்தனர்.
பின்சியாங் பகுதியில் உள்ள இரும்புஉருக்காலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட போது அங்கே 40 க்கும்மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்த வெடிவிபத்தில் இரண்டு மாடிக்கட்டிடம் விழுந்து நொறுங்கியது. ஆக்ஸிஜன் இயந்திரக்கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம்என்று கூறப்படுகிறது.
பின்சியாங் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 4 ம் தேதி தீப்பட்டித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் கொல்லப்பட்டதும், 26 பேர்காயமடைந்ததும் நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications