For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் யுத்தத்தைத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா..?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்து ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில்அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. தேர்தல் களத்தில் எதிரணிக் கட்சிகளுடன் மோதுவதற்கானநடவடிக்கைகளை அவை மேற்கொண்டுள்ளன.

இந் நடவடிக்கையில் முந்திக் கொண்டுவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆர்ப்பாட்டம்,ஊர்வலம், உண்ணாவிரதம் என தேர்தலுக்கு முந்தைய தனது தொடர் போராட்ட முறைகளை அவர்அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றி இரண்டுஆண்டு காலமாக தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தமிழக அரசின் இந்த தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து வருகின்ற 25-08-2000வெள்ளிக்கிழமையன்று போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்பாட்டம்,அதைத்தொடர்ந்து பல்வேறு அறப் போராட்டங்களையும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை நடத்த இருக்கிறது.

கருணாநிதியின் கடந்த நாலரை ஆண்டு கால ஆட்சியில், தொழிலாளர் விரோதப் போக்கு நாளுக்குநாள்அதிகரித்துள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலும், என்னுடைய ஆட்சிக் காலத்திலும் 1000மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்பட்டது.

1990-ம் ஆண்டு வளைகுடா போரைக் காரணம் காட்டி கருணாநிதி ஆட்சியில் 1005 பேருந்துகள் நிறுத்தப்பட்டன.கழக ஆட்சி ஏற்பட்டவுடன் அந்தப் பேருந்துகளை இயக்கினோம்.

டீசல் விலை ஏறிய போதும், உதிரி பாகங்களின் விலை ஏறிய போதும், கழக ஆட்சியில் கட்டண உயர்வு மக்களைபாதிக்கவில்லை. ஆனால் இப்பொழுது கருணாநிதி ஆட்சிக்கு வந்து சென்னைக்கும் மதுரைக்கும் இடையே 63ரூபாயாக இருந்த கட்டணத்தை 113 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்.

எந்த மாநிலத்திலும் கொண்டு வராத சிறப்புத் திட்டமான மூன்றாம் சலுகையுடன் கூடிய ஓய்வு கால சேமநலத்திட்டம் கழக ஆட்சியில் தான் அமல்படுத்தப்பட்டது. மனித நேய அடிப்படையில் சிறப்பு மருத்துவத் திட்டம்அமல்படுத்தப்பட்டது.

பொறியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகபாலிடெக்னிக்குகள் உருவாக்கப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி யில் தவறிய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குஓட்டுநர் பயிற்சியும், பணியும் கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் கருணாநிதி ஆட்சியில் அந்தச் சலுகைபறிக்கப்பட்டு விட்டது.

என்னுடைய ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைதொழிலாளர் வர்க்கம் மனப்பூர்வமாக வரவேற்ற காரணத்தால் தான், தொழிற்சங்கத் தேர்தலில் ஆளும் தி.மு.க.கோடிக்கணக்கில் செலவு செய்தும் தற்காலிக வேலை நீக்கம், இடமாற்றம் என்றெல்லாம் அச்சுறுத்தியும் கூடஇரண்டு இடங்களைத்தான் பெற முடிந்தது.

கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு என்னுடைய ஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகைகளை மனதில் நிறுத்திஇரண்டு இடங்களை அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு அளித்தனர்.

அத்தகைய தொழிலாளர்களின் நலனைக் காக்கவும், கருணாநிதி அரசின் தொழிலாளர் நல விரோதப் போக்கைக்கண்டித்தும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை தொடர் போராட்டங்களை நடத்த இருக்கிறது.

சென்னையில் உள்ள போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பேருந்துகள் தராமலும்,சம்பளம் இல்லாமலும் திருப்பி அனுப்பப்படுகின்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஓட்டுமொத்தத் தொழிலாளர்களின் கோரிக்கையான அரசு ஓய்வூதியம் வழங்காததைக் கண்டித்தும். ஓய்வூதியம்குறித்து மத்திய அரசுக்கு அனுப்பிய கோப்பு திரும்பி வந்தற்கான காரணத்தை நிர்வாகம் தெரிவிக்காததைக்கண்டித்தும், வரும் 25-08-2000 வெள்ளிக்கிழமையன்று அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் எல்லாபோக்குவரத்துக்கழக தலைமை அலுவலகங்களின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டமும், வாயிற்கூட்டமும்நடத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து, 06-09-2000 புதன் கிழமையன்று அனைத்து போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகங்கள்முன்பும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி14-09-2000 வியாழக்கிழமையன்று சென்னையில் மாபெரும் ஊர்வலம் நடைபெறும்.

இத்தனைக்கும் அரசு செவி சாய்க்காவிட்டால் , 25-09-2000 திங்கட்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையினர் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X