தொழிலதிபர் வீட்டில் ரூ.3.5 லட்சம் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றைக்கொள்ளையடித்த கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கோவை அருகேயுள்ள சாவக்காட்டுப் புதூர் பகுதியில் விசைத்தறி வைத்து நடத்தி வருபவர் லோகநாதன். இவர்கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இந்த சமயத்தில் அவரதுவீட்டில் உள்ள வென்டிலேட்டர் வழியாக சிலர் புகுந்து பீரோவை உடைத்தனர்.
அதில் இருந்த பட்டுப்புடவைகள், 100 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றைத்கொள்ளையடித்துக் கொண்டு சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications