குண்டர் சட்டத்தில் கைதான 1000 பேர் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளசுமார் 1000 பேரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் ஒருவரை விசாரணை ஏதுமின்றி ஓராண்டு சிறையில்அடைக்கமுடியும். அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியரோ, மாநகர போலீஸ்கமிஷனரோ பிறப்பிக்கவேண்டும்.

அப்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 12 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்து அந்தஉத்தரவை ரத்து செய்யும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு. அதே நேரத்தில்மறுபரிசீலனை செய்யும்படி 12 நாட்களுக்கு மனு செய்ய கைதிக்கும் உரிமை உண்டு.

மாவட்ட ஆட்சியரும், மாநகரப் போலீஸ் கமிஷனரும் பிறப்பிக்கும் உத்தரவில்கைதிக்கான இந்த உரிமை பற்றி குறிப்பிடப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லாது என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்தஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததிருச்சியைச் சேர்ந்த கார்த்திக் சார்பில் அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்தார்.

கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க திருச்சி நகரப் போலீஸ் கமிஷனர் கடந்தடிசம்பர் 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அந்த உத்தரவில் கைதிக்கானஉரிமை குறிப்பிடப்படவில்லை.

ஆகவே, போலீஸ் கமிஷனரின் அந்த உத்தரவு செல்லாததாகிவிட்டது. உச்சநீதிமன்றம்அளித்த தீர்ப்பின்படி கார்த்திக்கை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அந்தமனுவில் கார்த்திக்கின் தாயார் கூறியிருந்தார்.

இம் மனுவை நீதிபதி பத்மநாபன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்துதிங்கள்கிழமை தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படவேண்டியுள்ளது.அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கைதிக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை திருச்சி நகரபோலீஸ் கமிஷனர் மீறியுள்ளார். ஆகவே, அவர் பிறப்பித்த உத்தரவுசெல்லாததாகிவிட்டது.

குண்டர் சட்டத்தின் கீழ் இதுவரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளிலும் இந்தஉரிமை குறிப்பிடப்படவில்லை. அதனால், தமிழக சிறைகளில் உள்ள ஏராளமானகைதிகள் விடுதலை செய்யும் நிலை ஏற்பட்டால் அது மோசமான பின் விளைவுகளைஏற்படுத்தும். அரசுக்கும் பெரும் பிரச்சினை ஏற்படும் என்று அரசு வழக்கறிஞர்கூறியுள்ளார்.

பின் விளைவுகளைப் பற்றி நாங்கள் கருத்தில் கொள்ளமுடியாது. ஒருவரின் அடிப்படைஉரிமையைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்.

எனவே, கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்தநீதிமன்றம் ரத்து செய்து, அவரை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இது தவிர சென்னை, வேலூர், கடலூர், சேலம், திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்டசிறைகளில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள சுமார் 1000 பேரை விடுதலைசெய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+