வீரப்பனிடம் கேவலமாக பணிந்திருக்க மாட்டேன்: ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனின் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசைப் போல் இந்த அளவுக்குக் கேவலமாகப் பணிந்து போயிருக்கமாட்டேன் என்று முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் திங்கள்கிழமை நடந்த விழா ஒன்றில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.விழா முடிந்து நிருபர்களிடம் பேசினார்.
கர்நாடக அரசு தடா கைதிகளை விடுவித்துள்ளதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.அதனைப் பின்பற்றி தமிழக அரசும் ஐந்து தடா கைதிகளை விடுவித்துள்ளது. நான்முதல்வராக இருந்திருந்தால்வீரப்பனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்.
தமிழக அரசைப்போல் இந்த அளவிற்கு கேவலமாகப் பணிந்து போயிருக்க மாட்டேன். வீரப்பனுடன்தீவிரவாதிகள் கூட்டணி வைத்துள்ளது தெளிவாக தெரிந்த விஷயம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications