For Daily Alerts
ஆசிய வலுதூக்கும் போட்டி - இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்
டெல்லி:
ஆசிய வலுதூக்கும் போட்டியில் இந்திய அணி 5 வெள்ளிப் பதக்கங்கள் உள்படமொத்தம் 8 பதக்கங்களை வென்றது.
பிலிப்பைன்ஸில் நடைபெற்று வந்த இந்த போட்டிகள் திங்கள்கிழமை முடிவடைந்தன.இந்தியாவின் சார்பில் 10 பேர் கலந்து கொண்டனர்.
மகளிர் பிரிவில் ரோஸலின் ஆவ், சரளா ஷெட்டி, ரூமா பால் ஆகியோரும் ஆண்கள்பிரிவில் பினோத் குமார் பத்ரா, மகேஷ் குமார் கந்தெல்வால் ஆகியோரும் வெள்ளிப்பதக்கங்கள் வென்றனர்.
குமார், நிலோஷ் ஜோஷி, சுஷில் தாக்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களைவென்றனர். இப் போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக 3-வது இடத்தைப் பெற்றது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!