தமிழ்நாட்டில் 84 ஆயிரம் இலங்கை அகதிகள்
டெல்லி:
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 84 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.
அவர்களுக்கும், திபெத்திய அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படாது என்றுமத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதுஎழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்தியாசாகர் ராவ்அளித்த பதில்:
இந்தியாவில் இலங்கை, திபெத் நாடுகள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த பலர்அகதிகளாகத் தங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 31-ம் தேதி கணக்குப் படி இந்தியாவில்இருக்கும் வெளிநாட்டு அகதிகளின் எண்ணிக்கை 2லட்சத்து 1 ஆயிரத்து 706.
இவர்களில் 85 ஆயிரம் பேர் இலங்கையையும், 76 ஆயிரம் பேர் திபெத்தையும்சேர்ந்தவர்கள். 1,175 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லாம்தங்களுக்கு அகதிகள் அந்தஸ்து வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அகதிகள் பிரச்சினையைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டங்களால் எந்தப் பிரச்சினையும்இல்லை. ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் பிரச்சினையை அடுத்து நாட்டின்பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ள காஷ்மீர் மாநில மக்களையும்,வெளிநாட்டு அகதிகளையும் ஒரே மாதிரி மத்திய அரசு கருதாது.
காஷ்மீர் மக்கள் இடம் பெயர்ந்துதான் சென்றுள்ளார்களே தவிர அகதிகளாகச்செல்லவில்லை. ஆனால், வெளிநாட்டு அகதிகள் விஷயம் என்பது வேறு.
தலைநகர் டெல்லியில் 384 வெளிநாட்டு அகதிகள்தான் தங்கியுள்ளனர். காஷ்மீர்மாநில மக்களும் டெல்லியின் பல பகுதிகளில் வசிக்கின்றனர்.
அருணாசலப் பிரதேசத்தில் திபெத்திய அகதிகள் அதிகம் பேர் உள்ளனர். தமிழகத்தில்அதிகபட்சமாக 84 ஆயிரத்து 500 இலங்கை அகதிகள் உள்ளனர். ஹரியானாவில் 1021ஆப்கானிஸ்தான் அகதிகள் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு அகதிகள் அந்தஸ்தோ,இந்திய குடியுரிமையோ வழங்கப்படாது என்றார் அவர்.