ஆந்திராவில் பலத்த மழைக்கு 18 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதையடுத்து ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
பலத்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். இத் தகவலை மாநில சட்டப்பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை தெரிவித்தார்.
குண்டூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 பேர் இறந்துள்ளனர். அடுத்து கர்னூர், நால்கொண்டா மாவட்டங்களில் தலா 4 பேரும், பிரகாசம் மாவட்டத்தில்3 பேரும் இறந்துள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசித்த 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன என்றார் சந்திரபாபு நாயுடு.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications