பசுக்களைக் கொல்லாதீர்கள் ...கோருகிறார் ஜாக்கி சான்
டெல்லி:
பசுவதையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு பிரபல ஆங்கில நடிகர் ஜாக்கி சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு ஜாக்கி சான் கடிதம் எழுதியுள்ளார். அதில், பசுக்களை கொடுமைப்படுத்துவது இந்தியாவில் பெருகி வருகிறது. இதுகண்டிக்கத்தக்க விஷயமாகும்.
மிருகங்கள் பாதுகாப்பு மற்றும் நலச்சட்டப்படி பசுக்களை வதை செய்யக் கூடாது. இறைச்சிக்காகவும், தோல் பொருட்கள் ஏற்றுமதிக்காகவும்பசுக்களை வதை செய்வதும், கொல்வதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய விஷயமாகும்.
பல பெருமைகள் கொண்ட செழுமையான இந்தியாவில் பசுக்களைச் சுதந்திரமாக நடமாட அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக விலங்குகள் வதைத் தடுப்பு பிரச்சாரக் குழு மற்றும் பீப்பில் பார் த எதிக்கல் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல் அமைப்பு ஆகியவற்றின்செய்தித்தொடர்பாளார் பமீலா ஆன்டர்சன் விலங்குகளை வதைக்கக் கூடாது என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைப் பார்த்த ஜாக்கிசான், பிரதமர் வாஜ்பாய்க்கு பசுவதையைத் தடுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
ஜாக்கி சான் தவிர பிரபல ஹாலிவுட் ஸ்டார்களான ஸ்டீவன் சீகல், பால் மெக்கார்டனி ஆகியோரும் பிரதமர் வாஜ்பாய்க்கு பசுவதையைத் தடுக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications