இலங்கைக்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றார் காந்தி பேரன்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கைக்கான இந்தியத் தூதராக மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி புதன்கிழமை பொறுப்பேற்றார்.
தனது நியமனத்திற்கான அத்தாட்சிப் பத்திரங்களை அதிபர் சந்திரிகாவிடம் புதன்கிழமை பிற்பகல் ஒப்படைத்தார்.
கோபால்கிருஷ்ண காந்தி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் செயலாளராக இருந்தவர். 1996 முதல் 1997 ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்காவிற்கானஇந்தியத் தூதராக இருந்தார்.
1978 முதல் 1982 வரை இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதரின் செயலாளராகவும் கோபால கிருஷ்ண காந்தி பணியாற்றியிருக்கிறார் என்பதும்குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications