காட்டிலிருந்து படங்கள் அனுப்பினார் நக்கீரன் கோபால்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காட்டிலிருந்து நக்கீரன் கோபால் சில புகைப்படங்களைஅனுப்பியுள்ளார். அவர் தொடர்ந்து வீரப்பனுடன் பேச்சு நடத்திவருவதாக நக்கீரன் பத்திரிகை இணை ஆசிரியர் காமராஜ்தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ள ராஜ்குமார் உள்பட4 பேரை மீட்க நக்கீரன் கோபால் அரசுத் தூதராக காட்டுக்குள்சென்றார்.
அங்கு அவர் வீரப்பனைச் சந்தித்துப் பேசினார். பின்னர்வீரப்பனைத் தான் சந்தித்தது தொடர்பாகவும், வீரப்பனின்மறைவிடங்களையும் படம் எடுத்து அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் ராஜ்குமார் உள்பட 4 பேரையும் விடுவிப்பதுகுறித்து வீரப்பனிடம் பேச்சு நடத்தி வருகிறார். பேச்சுவார்த்தைகுறித்து மேல் விவரங்கள் தெரியவில்லை என்றார் காமராஜ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications