காங்கிரஸ் மீது வழக்குத் தொடருவோம்: பா.ம.க எச்சரிக்கை
பாண்டிச்சேரி:
வீரப்பனுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்குத் தொடர்பு இருக்கிறது என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சியினர் அதை நிருபிக்காவிட்டால்அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று பாண்டிச்சேரி பிரிவு பா.ம.க.அமைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான மஞ்சினி கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி,பா.ம.க.நிறுவனர் ராமதாசுக்கும், வீரப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.
இதற்குக் கடுங்கண்டனம் தெரிவித்து எம்.எல்.ஏ. மஞ்சினி வெளியிட்ட அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ள குற்றச்சாட்டை அவர்நிருபிக்க வேண்டும். தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவருக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கும் தொடரப்படும்என்று கூறியுள்ளார் மஞ்சினி.












Click it and Unblock the Notifications