இன்னும் இரு தினங்களில் தமிழகத்தில் புயல் அபாயம்
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்குபலத்த மழை பெய்யக்கூடும் என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை புயல் எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திர மாநிலத்திற்கு கிழக்கே மேற்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த தாழ்வழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறவாய்ப்புள்ளது.
இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யக் கூடும். மேலும், கேரளா மற்றும் கர்நாடகமாநிலங்களிலும் பரவலாக மழை பெய்யும்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும்மேகங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்த மழை இன்னும் 38 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications