காங்கிரசில் இருந்து பா.ஜகவுக்கு...
எஸ். சுப்பிரமணியம்
ஆனால், தந்தையைப் போல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடராமல், காங்கிரசில்இருந்து தனது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர். காங்கிரசின் சார்பில் 1984ல் சேலம் தொகுதி எம்.பி. ஆனார்.அன்று முதல் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் முதல் முறையாக அமைச்சரானார். அதன் மூலம்தாத்தா, தந்தையை தொடர்ந்து தாம் மத்திய அமைச்சராகி விட்ட மகிழ்ச்சி அவருக்கு கிடைத்தது. பின்னர் காங்கிரஸ்உடைந்ததும் திவாரி தலைமையிலான காங்கிரசில் சில மாதம் இருந்தார்.
அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவில் இணைந்தார். கம்யூனிஸ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்மதச்சார்புள்ள பாஜகவில் இணைந்தது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாஜகவிலும் அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகஅவரை பாஜக நிறுத்தியது. அதிமுக ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றார் ரங்கராஜன்.
1998-ம் ஆண்டு அதிமுக ஆதரவுடன் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தபோது, மத்திய மின்சக்தித்துறைஅமைச்சராக பொறுப்பேற்றார். அந்த ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்த பின்னர் திமுக கூட்டணியில் மீண்டும்திருச்சியில் 1999ம் ஆண்டு போட்டியிட்டு வென்றார்.
அதே அமைச்சர் பதவியையும் பிடித்தார்.












Click it and Unblock the Notifications