தமிழக நகர்ப்புறங்களில் 1150 விளையாட்டு மையங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக நகர்புறங்களில் புதிதாக 1150 விளையாட்டு மையங்கள் அமைக்க முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஒரு சில பள்ளிகளில் மட்டும்தான் விளையாட்டு மற்றும் பொழுபோக்குமையங்கள் உள்ளன. இதனால், 35 சதவீத மாணவர்கள் தேவையான விளையாட்டுவசதிகளைப் பெற முடியாமல் உள்ளனர்.

மாணவர்களின் சக்தியை ஒருமுகப்படுத்தவும், அவர்கள் தீய வழியில் செல்லாமல்தடுக்கவும் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி மற்றும் நகர்ப்புறங்களில் 5ஆயிரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையங்கள் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கிராமப்புறங்களில் 3,850 விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிமையங்கள் அமைக்க கடந்த மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இப்போது நகர்ப்புறங்களில் 1,150 விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையங்கள்அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நகர்ப்பகுதியில் அமைக்கப்படும் ஒவ்வொரு மையத்துக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம்ரூ. 2.87 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

இது தவிர நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை சேர்ந்து தலாரூ. 23 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 2.64 கோடியை தனியாக வழங்கும்.

இந்த விளையாட்டு மையங்களில் சிறு விளையாட்டுக்கள், உள் அரங்கவிளையாட்டுகள், திறந்தவெளி ஜிம்னாஸியம் ஆகிய வசதிகள் இருக்கும்.

மேலும் கைப்பந்து, பூப்பந்து, வளைப்பந்து, கபாடி, நீளம் தாண்டுதல், உயரம்தாண்டுதல் ஆகிய விளையாட்டுக்களுக்கும் தேவையான வசதிகளும்உருவாக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+