• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்?

By Staff
Google Oneindia Tamil News

1986-ம் வருடம் ராஜிவுக்கு குண்டு வைத்த பிறகு 87-ம் வருடம் அரியலுர் மருதையாற்று ரயில் பாலத்தில் வெடிகுண்டு வைத்தார்கள். இந்தகுண்டுவெடிப்பில் ரயில் கவிழ்ந்து இருபத்தியாறு பேர் பலியானார்கள்.

அப்பொழுதுதான் மறுபடியும் சுதாரித்துக்கொண்ட தமிழக போலீஸார் அதிர்ந்தும் போனார்கள். இந்தப்படைகளின் பலம் தான் என்ன ,எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்று தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது காவல்துறை. இந்த சம்பவத்திற்கு பிறகு அப்பாவிமக்களைக்கொல்வதில்லை என்று முடிவெடுத்தது தமிழ்நாடு விடுதலைப்படை.

அடுத்து மக்கள் பிரச்சனைகள் என்று தமிழரசன் அமைப்பு சிந்திக்க அப்பொழுதும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காவிரி நதிநீர்பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று விடுதலைப் படையினரும் விவாதிக்க ஆரம்பித்தனர்.

இந்தப் பிரச்னையும் தமிழரசன் அமைப்பினால் தேசிய பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது. தமிழ்நாடு தனி நாடு என்று அறிவித்துவிட்டால்என்றோ இந்த இப்பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும் என்பது இவர்களின் எண்ணம்.

யோசித்தார்கள்..., மைசூர் அருகில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைமீது தமிழ்நாடு விடுதலைப் படையினரின் கோரப்பார்வை விழுகிறது.எதற்கு இந்த அணை, இது இல்லாவிட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவதற்கு யார் தடை விதிக்க முடியும் என்று தீர்மானித்தார்கள்.

அணையை தகர்த்துவிட முடிவெடுத்தார்கள்.

இதனை செயல் படுத்த ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துவாங்கவும், திட்டத்தை செயல்படுத்தவும் நிறைய பணம் தேவைப்பட்டது. இதற்கு என்னசெய்வது என்று திட்டமிட்டவர்கள். ஏதாவது ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

திட்டமிட்ட படி, பொன்பரப்பி வங்கி கேஷியர் நந்தகுமார் என்பரை அலுவலக நேரத்திலேயே சுட்டுக்கொன்று விட்டு, பணத்தோடுதப்பியோடும் பொழுது அடித்துக்கொல்லப்பட்டார் தமிழரசன்.

பொதுமக்கள் தான் தமிழரசனை அடித்துக்கொன்றார்கள் என்கிறது காவல்துறை. வங்கிக்கொள்ளை பற்றி இன்பார்மர்கள் மூலம் ஏற்கனவேதகவல் பெற்று விட்ட காவல்துறையினர்தான் பொதுமக்கள் போர்வையில் வந்து தாக்கிக்கொன்றதாக தமிழ்நாடு விடுதலைப்படையினர்கருதுகின்றனர்.

இந்த சம்பவத்தில் தமிழரசனோடு அவரது கூட்டாளிகளான தர்மலிங்கம், அன்பழகன் , ஜெகந்நாதன், பழனிவேல் என பலியான ஐந்துபேருமே தமிழ்நாடு விடுதலைப்படையின் மிக முக்கியமானவர்கள். இது நடந்தது 1987-ம் வருடம் செப்டம்பர் முதல் தேதியன்று.

வங்கிக் கொள்ளை சம்பவம், தமிழரசன் மறைவு இவைகளில் தமிழ்நாடு விடுதலைப்படையினர் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். இதன்பிறகு ஓரிரு ஆண்டுகள் இந்த இயக்கம் காணாமலும் போயிருந்தது. அதன் பிறகு இந்த இயக்கத்திற்கு உயிர் கொடுத்தவர் பாலலேறு என்றுபெயர் பெற்ற பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலன்.

தமிழரசனுக்கு குருவாக இருந்த புலவர் கலியபெருமாள் தான் பொழிலனுக்கும் குரு. இவருக்கு ஆதரவாக இருந்தவர் சுந்தரம்.

இதன் பிறகு இந்த அமைப்பு நடத்திய மிகப்பெரிய ஆப்பரேஷன், கொடைக்கானல் குண்டு வெடிப்பு. 1988-ல் இலங்கையில் இந்தியஅமைதிப்படை இருந்த நேரம். வானொலியிலும் , டி.வியிலும் தமிழர் விரோத செய்திகளே ஒலி பரப்பப்படுவதாக தமிழக அரசியல்கட்சிகள் போராடி கொண்டிருந்த நேரம்.

தி.மு.கவும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி மறைமலை நகரில் காங்கிரஸ் மாநாட்டிற்குராஜிவ்காந்தி வர இருந்த நேரத்தில் சென்னை கத்திப்பாரா நேரு சிலை அருகே குண்டு வைத்தார்கள்.

மறுநாள் கொடைக்கானல் டி.வி. டவர் குண்டு வெடிப்பு. இந்த கொடைக்கானல் குண்டு வெடிப்பு வழக்கில் சுந்தரம்கலியபெருமாள்,பொழிலன் உட்பட 20 பேர் கைதானார்கள். அதன் பிறகு மறுபடியும் கணாமல் போனது அந்த அமைப்பு. மறுபடியும்இப்பொழுது ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் வீரப்பனோடு சேர்ந்து.

தமிழரசன், பொழிலன் அடுத்து இப்பொழுது மாறன் தமிழ்நிாடு விடுதலைப்படைக்கு தலைமை ஏற்றிருக்கிறார். மாறன் சொல்வதைக்கேட்டுத்தான், வீரப்பன் கூட கியூபா நாட்டின் போராளிகளான சேகுவாரா பற்றியும், கியூப புரட்சியை தலைமையேற்று நடத்தியஅந்நாட்டின் இப்போதைய அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பற்றியும் பேச ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள்.

சொல்லப்போனால், முன்பு மாறனுக்கும் புலவர் கலியபெருமாள் தான் வழிகாட்டி. தற்போது தமிழ் பத்திரிகைகளில் வீரப்பனை தன்தலைவராக ஏற்றுக்கொள்கிறேன் என்று புலவர் கலியபெருமாள் பேட்டி கொடுத்திருக்கிறார். இது பலரையும் புருவம் உயர்த்தச்செய்திருக்கிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X