நகைப் பட்டறையில் ரூ. 5 லட்சம் நகை திருட்டு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் நகைப் பட்டறையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டுப் போனது.
கோவை இடையார் வீதியில் ஒரு தங்க நகைப் பட்டறையை பாலாஜி மற்றும் பத்மநாபன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்களது பட்டறையில் 12தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 21ம் தேதி இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் வந்து திறந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒருகிலோ தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. நகைப்பட்டறையின் கூரையும் உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, போலீசில் புகார் செய்யப்பட்டது. நகைகள் திருட்டுப் போனது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications