For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடு நம்பர் டூ ... எய்ட்ஸில்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

மும்பைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் எய்ட்ஸ் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதமிழகத்தில் எவ்வித ஒழுக்க கட்டுப்பாடு தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும் என மாநில சமூகநலத்துறை அமைச்சர் சற்குண பாண்டியன் தெரிவித்தார்.

கோவையில் நடந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட சமூகநலத்துறை அமைச்சர்சற்குண பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 32 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் மூலம் 6 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் 63 சுய உதவிக் குழுக்கள் மகளிருக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை கடன் அளித்து வருகிறது.இவர்கள் சிறு சேமிப்பாக 40 கோடி ரூபாய் சேமித்துள்ளனர்.

இவற்றைப் பயன்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கும் பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆயிரத்து 99 மகளிர் அமைப்புக் குழுக்களுக்கு 17 தொண்டுநிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. இதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாகசெயல்பட்டு வருகின்றனர்.

மாநில அரசின் பூமாலைத் திட்டத்தின் கீழ் மகளிர் சுயதொழில் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைவிற்பனை செய்ய போதுமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

உழவர் சந்தைகளில் இவர்களது பொருட்களை விற்பனை செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. ஒரு பெண்குழந்தை பிறந்தால் அக்குழந்தையை மட்டும் வளர்த்தால் அக்குழந்தைக்கு அரசு ரூ. 3 ஆயிரம் டெபாசிட்செய்கிறது.

கருவில் இருக்கும் குழந்தைக்கு, அதாவது கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு ரூ. 500 உதவித் தொகையாகஅளிக்கிறது. இந்த தொகை பெண் குழந்தை பிறந்தால் ஆயிரம் ரூபாயாக மாறுகிறது.

சிசுவதையைத் தடை செய்ய அரசு பெண் சிசுவைக் கொலை செய்வோர் மீது கொலைக் குற்றம் சுமத்தஉத்தரவிட்டுள்ளது. மிருகங்களை வதை செய்யத் தனிச் சட்டம் இருக்கும்போது நாட்டை வளப்படுத்தக் கூடிய,தாய்மைப் பேற்றைக் கொடுத்த பெண் சிசுவைக் கொலை செய்வது கொடுமையான செயல்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க மாவட்டந்தோறும் ஒரு குழு செயல்பட்டு வருகிறது.வரதட்சணைக் கொடுமையை கட்டுப்படுத்த அரசு புதிய முயற்சியை மேற் கொண்டுள்ளது. சுய உதவிக் குழுக்களில்இவர்கள் புகார் செய்தால், அக்குடும்பத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைத் தீர்க்க முயற்சித்துவருகிறோம்.

இந்தத் தீர்வுக்கு கட்டுப்பட மறுக்கும் போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். எந்தக் கொடுமைக்கும்ஆளாகும் பெண்களையும் மீட்க அரசு அனைத்து வழிமுறைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலை தெரியாமல் எந்த பெண்களும் செல்ல வேண்டாம். குறிப்பாக வீட்டு வேலைகளைசெய்ய அங்கு செல்ல வேண்டாம். துபாய் போன்ற இடங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட சிறுமிகளைக் காப்பாற்ற நடிகை ரேவதி, சுஹாசினி ஆகியோர் முயற்சி மேற்கொண்டுநிதியளித்துள்ளனர்.

மும்பைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் எய்ட்ஸ் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதமிழகத்தில் எவ்வித ஒழுக்க கட்டுப்பாடு தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார் அமைச்சர்சற்குணபாண்டியன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X