மளிகைக் கடைக்காரர் வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் மளிகைக் கடைக்காரர் வீட்டில் பட்டப்பகலில் ரூ. ஒரு லட்சத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றவர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை ராம் நகர், பாரதி வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் முருகேசன் (38). இவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்வியாபாரத்திற்காக பணத்தை வீட்டில் வைத்து பூட்டி விட்டு கடைக்குச் சென்று விட்டார்.
அந்த சமயத்தில் யாரோ சிலர் இவரது வீட்டில் புகுந்து ஒரு லட்ச ரூபாயைத் திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசில் முருகேசன் புகார்கொடுத்தார். காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications